விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதா! ரகசியமாக எரிக்கப்பட்ட உடல்: அடுத்தடுத்து வெளிவரும் தகவல்

Report Print Santhan in இலங்கை
2629Shares

இந்தியாவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட இலங்கை தாதாவின் உடல் அங்கு எரிக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாக இலங்கை உளவுத் துறை விசாரணையை துவங்கியுள்ளது.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர் Angoda Lokka. கடந்த 2017-ஆம் ஆண்டு தனக்கு எதிரான கேங்கில் 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.

இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு பதுங்கிய போது, அவரை பொலிசார் கைது செய்தனர். இரண்டு முறை கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளிவந்து, சென்னை பொலிசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பெங்களூருக்கு தப்பினார்.

2017-ல் எதிரி கேங்கில் 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட அங்கொட லொக்கா அங்கிருந்து தப்பி சென்னையில் பதுங்கினார்.

ஆனால் சென்னை போலீசார் அங்கொட லொக்காவை கைது செய்தனர். அதுவும் 2 முறை கைது செய்திருக்கின்றனர். போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற போதும் சிக்கியிருக்கிறார் அங்கொட. ஆனால் ஜாமீனில் வெளிவந்த அங்கொட லொக்கா, சென்னை போலீசாரின் கண்ணில் மண்ணில் தூவிவிட்டு பெங்களூருவுக்கு தப்பியுள்ளார்.

அதன் பின் கடந்த 3-ஆம் திகதி நெருங்கி பழகிய பெண் ஒருவரால் Angoda Lokka விஷம் வைத்து கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த அவரின் உடல், தமிழகத்தின் கோயமுத்தூருக்கும் கொண்டு வரப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் பொலிசாரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஊரடங்கு நேரத்தில், பெங்களூருவில் இருந்து தாதாவின் உடல் எப்படி தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது, இதற்கு உதைவ்யாது என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை உளவுத்துறை விசாரிக்க துவங்கியுள்ளது.

ஏனெனில் பல மாதங்களுக்கு முன்பு Angoda Lokka இந்தியாவில், கார் பார்க்கில் ஒன்றில் இருந்த போது, லாரி மோதியதால், படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெளிநாடுகளில் Angoda Lokka-வின் போட்டியாளர்கள் அவரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக Angoda Lokka பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ததாகவும், இத்தாலியில் உள்ள உறவினர் மூலம் ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாகவும் புலனாய்வுப் பிரிவுகளுக்கு முன்னர் தகவல் கிடைத்தது.

அவர் படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர் ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டாரா என்று புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்