ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கை பெண்

Report Print Basu in இலங்கை

இலங்கையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொழும்பில் உள்ள பெண்களுக்கான டி சோய்சா மருத்துவமனையிலே பெண் ஒருவர் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இன்று காலை ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தன என மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் தாய் Gampaha மாவட்டத்தில் Pepiliyawalaல் வசிக்கும் 29 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதை தவிர மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஐந்து பெண் குழந்தைகளும் தாயும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்