பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு! புலிகளின் தடையை நீட்டிக்க கோரிக்கை

Report Print Karthi in இலங்கை
1649Shares

பிரித்தானியாவின் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதையடுத்து, தற்போது இலங்கை அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

மார்ச் 8, 2019 தேதியிட்ட பிரித்தானியாவின் உள்துறை வெளியுறவுத்துறை செயலாளரின் முடிவை எதிர்த்து எல்.டி.டி.இ அமைப்பு 2019 மே மாதம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இருந்து ஆணைக்குழுவின் தீர்ப்பு வெளிவந்திருந்தது. முன்னதாக 2000 ஆம் ஆண்டின் இங்கிலாந்து பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் எல்.டி.டி.ஈ இருந்தது.

இந்நிலையில் பிரித்தானிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதாக உத்தரவிட்டிருந்தது.

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் இலங்கை ஒரு கட்சியாக இல்லாததால், நேரடி பிரதிநிதித்துவங்களை செய்ய முடியவில்லை என்றாலும், தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் இலங்கை அரசு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உதவி வந்திருந்தது.

இலங்கை தற்போது வரை, எல்.டி.டி.இ மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தத்துடன் இணைந்த குழுக்களின் எச்சங்கள் வெளிநாடுகளில் தீவிரமாக செயல்படுகின்றன, வன்முறையைத் தூண்டுவதற்கும் நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கும் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று குற்றம்சாட்டி வருகின்றது.

இலங்கை தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் அச்சுறுத்தல்களுக்கு விழிப்புடன் உள்ளது, மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களை எப்போதும் ஆதரிக்கும் என்று இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்