பம்பலப்பிட்டியில் புத்தாண்டு கொண்டாடிய மைத்திரி!

Report Print Vethu Vethu in அறிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பம்லப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில் நாள் முழுவதும் நடைபெற்றுது.

நிகழ்வில் புத்தாண்டு விளையாட்டுகள், சிறுவர் போட்டிகள் மற்றும் இசை நிகழ்வுகள் என்பன நடைபெற்றன.

ஜனாதிபதி செயலக ஊழியர் சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ உட்பட ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்