இலங்கையில் ஒரு நாளில் பல கோடிகளை வருமானமாக ஈட்டிய நெடுஞ்சாலை

Report Print Vethu Vethu in அறிக்கை
260Shares
260Shares
lankasrimarket.com

புத்தாண்டு கொண்டாட்ட காலப்பகுதியில் நெடுஞ்சாலை மூலம் பெருந்தொகை பணம் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டு விடுமுறை தினமான கடந்த 15ஆம் திகதி மாத்திரம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு முகாமையாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்மூலம் சுமார் 30 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த 6ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 95000 வாகனங்கள் பயணித்துள்ளன.

அந்த நாட்களில் நாள் ஒன்றுக்கு 29 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

புத்தாண்டு தினமான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் 15ஆம் திகதி ஒரு இலட்சத்து பத்தாயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு முகாமையாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்