சுவிஸில் பதுங்கியுள்ள சன்னா இன்ரபோல் மூலம் கைதாவார்?

Report Print Rakesh in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் பதுங்கியுள்ள வாள்வெட்டுக் குழுவின் தலைவர்களில் ஒருவரான சன்னா என்பவரைச் சர்வதேசப் பொலிஸாரின் (இன்ரபோல்) உதவியுடன் கைது செய்யநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

யாழ். குடாநாட்டிலும், கொழும்பு, வவுனியா பகுதிகளிலும் கைதான வாள்வெட்டுச் சந்தேகநபர்களிடம் வாள்கள், கோடரிகள், குண்டுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.

இந்த ஆயுதங்கள் உடுவில் பகுதியில் உள்ள ஒருவர் மூலமாகவே சந்தேக நபர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், இவற்றுக்கான பணம் சுவிற்ஸர்லாந்தில் உள்ள சன்னா என்பவர் மூலம் அனுப்பப்படுவதாகவும் பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சன்னா என்பவர் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கொலை ஒன்றைச் செய்து நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் சுவிற்ஸர்லாந்துக்குத் தப்பிச்சென்றுள்ளார்.

அவரை அங்கிருந்து சர்வதேசப் பொலிஸார் ஊடாக இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்