ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

Report Print Murali Murali in சுவிற்சர்லாந்து
137Shares
137Shares
ibctamil.com

வரவிருக்கும் சூறாவளி மற்றும் மழைக்காலப் பேராபத்துகளிலிருந்து ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதி முகாம்களைப் பார்வையிட்ட சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, ஊடகங்களுக்கு இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான்கு நாள் பயணமாக பங்களாதேஷ் சென்றுள்ள சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட், ரோஹிங்கியா அகதிகள் தங்கியுள்ள குட்டுபலாங் முகாமை பார்வையிட்டுள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

“அகதிகள் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக பங்களாதேஷிக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உறுதியளித்திருந்த 8 மில்லியன் சுவிஸ் பிராங்க் உடன், கூடுதலாக 12 மில்லியன் சுவிஸ் பிராங்க் அளிப்பதாக அறிவித்துள்ளார்.

ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் விதமாக பங்களாதேஷ் மற்றும் மியான்மர் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் தற்போது நிலவும் அகதிகள் நெருக்கடியை தீர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

அதே சமயம், அகதிகள் நாடு திரும்புவது முழுக்க ழுழுக்க அவர்களின் சுயவிருப்பத்தைச் சார்ந்தது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மியான்மரில் ரோஹிங்கியாக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் விதமாக ஐ.நா சபையின் முன்னாள் பொது செயலாளர் கோபி அனானின் பரிந்துரைகளை மியான்மர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்