வாழ்விட சூழலில் தாயக நினைவுகளைப் பிரதிபலித்த தமிழ் குழந்தைகள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
136Shares
136Shares
ibctamil.com

அண்மையில் சுவிட்சர்லாந்தில் சூரிச் நகர குடியிருப்பு ஒன்றில் நடைபெற்ற கோடைகால பல்கலாச்சார நிகழ்வில் தமிழ்ச் சிறார்களும் தமது அரங்காற்றுகை மூலம் தாயக உணர்வுகளையும் தமிழர் கலை வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாடானது அறுபதிற்கும் மேற்பட்ட தேசிய இன அடையாளங்களுடன் கூடிய மக்களின் கூட்டு கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் ஒரு நாடாகும்.

இங்கு ஆசிய, ஆபிரிக்க, வட ,தென் அமெரிக்க, கிழக்கு மேற்கு ஐரோப்பிய சமூகங்களைப் பிரதிபலிக்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் கலாச்சார அடையாளங்களை மதிப்பளித்து அங்கீகரிப்பது அந்த நாட்டின் அரச கொள்கைகளில் ஒன்றாகும், அதன் வெளிப்பாடே சமூக பல்கலாச்சார நிகழ்வுகளின் ஒழுங்கு படுத்தலாகும்.

இந்த வாய்ப்புகளை தென் அமெரிக்க, ஆபிரிக்க சமூகத்தினர் மிக அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ் மக்களும் அவ்வப் போது பயன்படுத்துவது சுவிஸ் மக்களினால் வரவேற்க்கப்படுகின்றது.

அந்தவகையில், சூரிச் நகரக்குடியிப்பு பகுதிகளில் ஒன்றாகிய சுவாமிடிங்கன் பகுதியில் நடைபெற்ற பல் கலாச்சார நிகழ்வில் தமிழ் இளையவர்களும் பங்கெடுத்து சிறப்பித்தனர்.

"விடைகொடு எங்கள் நாடே" என்ற பாடலை இசயமைத்துப்பாடி அந்தப்பாடலுக்கான உணர்வுபூர்வமான அபி நயத்தையும் வெளிப்படுத்தியிருந்தமை அங்கு குழுமியிருந்த பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது.

ஒருநாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்வில் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் தமிழ்ச்சிறார்கள் தமது ஆற்றுகை மூலம் சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்