சுவிற்சர்லாந்தில் தேர்தலில் களம் காணும் ஈழத்தமிழர்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தின் சுக் (ZUG) மாநிலத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் மாநகர சபைதலைவருக்கான (Zuger Stadtrat und für das Stadtpräsidium) தேர்தலில் ரூபன் சிவகணேசன் போட்டியிடுகின்றார்.

இம்மாநிலம் பல சர்வதேச நிறுவனங்களின் தலைமையகங்களையும் தன்னகத்தில் கொண்டுள்ள ஓர் மாநிலமாகவும், பல் நாட்டு முதலீட்டார்களின் வரிச்சலுகை வழங்கும் ஓர் மாநிலமாகவும், வலதுசாரிக் கட்சிகளின் அரசியல் ஆதிக்கம் நிறைந்த ஓர் மாநிலமாகவும் உள்ளது.

பல்வேறுபட்ட அரசியல் தளங்களில் 12 வருட காலமாக சுவிற்சர்லாந்து அரசியலில் Grossen Gemeinderatஆகவும், சுக் மாநில அரசின் உறுப்பினரான Kantonsrat ரூபன் சிவகணேசன் பதவிவகித்து வருகின்றார்.

மாநகரசபை உறுப்பினர் தேர்தலில் சோலிச ஜனநாயக கட்சியின் சார்பில் களம் இறங்கியுள்ளார் என்பது சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களிற்கு மேலும் ஓர் பெருமைதரக்க்கூடிய ஓர் நிகழ்வாகும்.

1980களில் அரசியல் தஞ்சம் அடைந்த இலங்கையை சார்ந்த சிறுபான்மை இனத்தமிழர்கள் இன்று புலம்பெயர் நாடுகளில் குறுகிய காலத்தில் இணைவாக்கம் அடைந்து, புலம்பெயர் நாட்டு அரசியலில் வராலாறு பதிப்பது என்பது இலகுவான விடயம் அல்ல.

இந்நாட்டில் நடைபெறும் தேர்தல்களிலும், அபிப்பிராய வாக்கெடுப்புகளிலும் வலதுசாரிக் கட்சிகளான (SVP,FDP,CVP,BDP) போன்றகட்சிகள் பல கோடிக்கான பணங்களை முதலீடு செய்வது வழமையாகிய விடயம்.

பல சந்தர்ப்பங்களில் சக்தி வாய்ந்த மலிவு விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதே வரலாறாக உள்ளது.

சுவிற்சர்லாந்து புலம் பெயர் நாட்டு தமிழர் அரசியலில் நிதி ஆதிக்கமுள்ள நிறுவனங்களின் முதலீடுகளோ, தலையீடுகளோ இன்றுவரை இடம் பெறவில்லை. இது மற்றைய தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிற்கு ஓர் முன்னுதாரணமாக உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து தமிழர் அரசியலின் ஓர் ஆரோக்கிய போக்கினையே காட்டுகின்றது. சாதரணமாகவே சோசலிச ஜனநாயக கட்சியிடமோ (SP) அல்லது பசுமைக்கட்சியிடமோ (Grüne) உள்ள அங்கத்துவர்களின் வருடாந்த சந்தா பணம் மட்டுமே வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு போதுமானாதாக இருப்பதில்லை.

வலதுசாரிக் கட்சிகளான SVP, FDP,CVP,BDP இவர்களுக்கு பல நிறுவனங்கள் தமது நலனையும், இலாபங்களை தக்கவைப்பதற்காக வலது சாரிக்கட்சிகளுக்கு கணக்கிற்கு வராத பெருந்தொகை நிதியை நன்கொடை என்ற பெயரில் வழங்குவது வழமையாகிய விடயம்.

இதனைக்கருத்தில் கொண்டே கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடை நிதி வெளிப்படைத்தன்மையாக இருக்கவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுவருகின்றது. இந்த வருடம் சுவிற்சர்லாந்தில் கடுமையான கோடைக்காலமாக இருந்தது.

சுக் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் ஆடிமாத கொழுத்தும் வெயிலிலும் வழமை போல் தேர்தல் பிரச்சார தேர்தல் பலகைககள் (Banner) சுக் நகரத்ததை ஆக்கிரமித்து கொண்டது.

அனைத்து சக வேட்பாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ரூபன் சிவகணேசனின் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்திருந்தது. இவர் தனது துவிச்சக்கரவண்டியில் தனது விளம்பர பலகையை ஓர் பெட்டியில் பொருத்தி நகரம் முழுவதும்பயணம் செய்து வருகின்றார்.

இதனை அவதானித்த ஊடகங்கள் இவரை அழைத்து ஓர் பிரத்தியேக நேர்காணலையும் நடத்தி இருந்தது. இச்செவ்வியில் ரூபன் சிவகணேசன் தனது தேர்தல் பிரச்சாரம் பற்றி குறிப்பிடும் போது,

“பணத்திற்கு பதிலாக தனது உடல்வலுவவை பயன்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார். இவரது இப்பிரச்சார யுக்தி பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதுமட்டுமல்லது இதுவரைக்கும் தனது பிரச்சாரத்திற்கு 479.25 சுவிஸ் பிராங்குகளே செலவழித்துள்ளதாக மிக வெளிப்படைத்தன்மையாக அறிவித்துள்ளார்.

இந்நடவடிக்கை ஓர் நேர்மையான அரசியல் வாதிக்கான முன்மாதிரியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் தனது தேர்தல் சுலோகமாக நிறங்களை தெரிந்து கொள்ளுங்கள் (Farben Bekennen)முன் வைத்துள்ளார்.

இச்சுலோகம் மூலம் இந்நாட்டில் வாழும் சிறுபான்மையாக வாழும் வெளிநாட்டவர்களை பிரதிநிதித்துவதாகவும், அவர்களுக்கும் இந்நாட்டு அரசியலில் பங்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தனியே சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாது இம்மாநிலத்தில் வாழும் நலன் கருதி சுக் மாநிலம் அனைவருக்கும், அனைத்தும் சுக் மாநிலத்திற்கு என்ற சுலோகத்தினையும் (Alles für Zug – Zug für alle) தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்துள்ளார்.

சுக் மாநிலத்தில் ஒவ்வொரு 3 பேரினது குடும்பங்ளில் ஒருவரது குடும்ப அடிப்படை வெளிநாட்டவர்களாகவே உள்ளனர்.

இந்நாட்டில் பிரஜா உரிமை எடுத்த அனைத்து தமிழர்களும், வெளி நாட்டவர்களும் தமது வாக்குகளை நடைபெரும் தேர்தல்களிலும், அபிப்பிராய வாக்கெடுப்பிலும் பயன்படுத்த வேண்டும்.

தேர்தல்களில் தத்தமது வாக்குரிமையை பயன்படுத்த தவறும் பட்சத்தில் எமது உரிமைகள் மீது பாதகமான தீர்மானங்கள் வரும் போது அவற்றை எம்மால் தடுக்கமுடியாது போய்விடடும்.

சுவிற்சர்லாந்தில் கடந்த வருடங்களில் நடைபெற்ற புள்ளிவிபரங்கள் அடிப்படையில் 40 விகிதத்திற்கும் குறைந்த மக்களே வாக்குரிமையை பயன்படுத்துகின்றனர்.

இது ஓர் குறிப்பிட்ட மக்களின் அபிலாசகளை மட்டுமே பிரதிபலிக்கும் அரசியலாக குறிகிவிடும் ஆபாயம் உள்ளது.

சுக் (ZUG) மாநாகரத்தில் வாழும் தமிழ் மக்கள் இத் துணிச்சலான இஞைனின் அரசியல் வெற்றிக்கு கைகொடுப்பார்கள் என நம்புகின்றோம்.

ரூபன் சிவகணேசனின் மிக எளிமையான தேர்தல் பிரச்சார யுக்தி இலங்கை இந்திய அரசியல் வாதிகளுக்கு ஓர் எடுத்துகாட்டாக அமையும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers