பொலிசார் வலையில் தானாக விழுந்த திருடன்: 80 செல்போன்கள் மீட்பு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
பொலிசார் வலையில் தானாக விழுந்த திருடன்: 80 செல்போன்கள் மீட்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் பொலிசாரிடம் சிக்கிய திருடனிடம் இருந்து களவுப் போன 80க்கும் மேற்பட்டவிலையுயர்ந்த செல்போன்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சூரிச் ரயில் நிலையத்தில் ரோந்து பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அப்போது, ரயில் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர்அங்கிருந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்துள்ளார்.

நபரின் நடவடிக்கையை கண்டு சந்தேகம் அடைந்தபொலிசார், அவரை அணுகி விசாரணைசெய்துள்ளனர்.

நபரின் பதில்களும் பொலிசாருக்கு இருந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

36 வயதானஅந்த ரோமானியா நாட்டை சேர்ந்த நபரை பொலிசார் ரயில் நிலையத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றனர்.

பயணிகளின் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் லாக்கர் அறைகளில் அந்த நபருக்குரிய அறையை பொலிசார் திறக்க உத்தரவிட்டுள்ளனர்.

வேறு வழியின்றி லாக்கர் அறையை திறந்தபோது, அதற்குள் 80க்கும் அதிகமான விதவிதமான மொடல்களில் செல்போன்கள் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக நபரை கைது செய்த பொலிசார், அந்த செல்போன்கள் அனைத்தையும் பத்திரமாக கைப்பற்றினார்கள்.

மேலும், சூரிச் மற்றும் Winterthur நகரங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் இந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு 46,000 பிராங்க் இருக்கும் என பொலிசார் மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 15ம் திகதி நடந்த இந்த கைது நடவடிக்கையை பல்வேறு விசாரணைகளுக்கு பின்னர் நேற்று பொலிசார் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments