சுவிஸ் மக்கள் இப்படியானவர்களா? இதோ வெளிவந்துள்ள 5 உண்மைகள்

Report Print Aathi Aathi in சுவிற்சர்லாந்து
சுவிஸ் மக்கள் இப்படியானவர்களா? இதோ வெளிவந்துள்ள 5 உண்மைகள்

சுவிட்சர்லாந்து பற்றி தவறாக கருதப்படும் ’5’ தகவல்களை பற்றி பார்ப்போம்.

அதிக நேரம் உழைக்கின்றனர்

ஒரு சுவிஸ் தொழிலாளி சராசரியாக 1568 மணி நேரம் உழைப்பதாக கடந்த 2014ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் இது கிரீஸ் (2042 மணி நேரம்), போர்த்துகல் (1857 மணி நேரம்), அயர்லாந்து (1821 மணி நேரம்), இத்தாலி (1734 மணி நேரம்), பிரித்தானியா (1677 மணி நேரம்) உள்ளிட்ட நாடுகளை விட குறைவான நேரம் ஆகும்.

அதிக அகதிகளை அனுமதிப்பதில்லை

2014ம் ஆண்டு கணக்கு படி, சுவிஸின் தனிநபர்-அகதி விகிதாச்சாரம், ஐரோப்பிய யூனியனின் சராசரியைவிட 3.5 மடங்கு அதிகம் உள்ளது. 2014 சுவிஸ் மக்கள் தொகையான 8.3 மில்லியனில், 62,620 பேர் அகதிகள். இது மொத்த மக்கள் தொகையில் 0.76 % ஆகும். ஆனால், ஐரோப்பிய யூனியனில் உள்ள 506.9 மில்லியன் மக்கள் தொகையில் வெறும் 1.09 மில்லியன், அதாவது 0.21 சதவிகித அகதிகளே உள்ளனர்.

வங்கியாளர்களாகவோ, கைக் கடிகாரம் செய்பவராக இருப்பார்கள்

2012ம் ஆண்டு கணக்குப்படி, சுவிஸில் 3.4% மக்களே வங்கியாளர்களாகவோ, கைக் கடிகாரம் செய்பவராகவோ இருந்துள்ளனர். அதாவது கடிகார நிறுவனங்களில் 55816 பேரும், வங்கி துறையில் 105166 பேரும் வேலை செய்கின்றனர். மேலும், சுவிஸில் பெரும்பாலான தொழிலாளர்கள், சுகாதாரம் மற்றும் சில்லரைத் தொழிலில் தான் உள்ளனர்.

நாட்டிற்கு ஜனாதிபதி உள்ளார்

சுவிஸிற்கு பெயரளவில் மட்டுமே ஜனாதிபதி உண்டு. சுவிஸ் அரசில், 7 நபர்கள் கொண்ட அமைச்சர்கள் குழுவே தலைமையாக செயல்படும். அவர்களில் ஒருவர் ஒரு ஆண்டு காலத்துக்கு சுழற்சி முறையில் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அதிபருக்கு உரிய எந்த அதிகாரமும் இருக்காது. எந்த முடிவுகள் எடுத்தாலும் அந்த 7 பேர் கொண்ட குழு இணைந்து தான் எடுக்க முடியும். தனி நபர் முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.

அதிகளவில் சீஸ் உண்பார்கள்

உண்மையில் பிரெஞ்சுக்காரர்கள் தான் ஆண்டுக்கு சுமார் 26.3 கிலோ சீஸ் உட்கொள்கின்றனர். இந்த பட்டியலில், சுவிஸ் 8வது இடத்தில் மட்டுமே உள்ளது.

2/5

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments