கவனக்குறைவு காரணமாக மூவர் பலி: சுவிஸில் தொடரும் சோக சம்பவங்கள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
கவனக்குறைவு காரணமாக மூவர் பலி: சுவிஸில் தொடரும் சோக சம்பவங்கள்
412Shares
412Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்து நாட்டில் பறக்கும் விளையாட்டுகளில் ஈடுப்பட்ட போது கவனக்குறைவு காரணமாக மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் யூரா மலைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் வேளையில் 60 வயதான நபர் ஒருவர் கிளைடர் விமானத்தில் பறக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது, நபரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கிளைடர் வானில் இருந்து வேகமாக பாய்ந்து தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்புக்குழுவினர் உடனடி சிகிச்சை அளித்த போதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக வாட் மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதே போல், சொலூதுர்ன் மாகாணத்தில் உள்ள Matzendorf என்ற பகுதியில் 70 வயதான முதியவர் கிளைடர் விமானத்தை இயக்க முயற்சித்துள்ளார். ஆனால், புறப்பட்ட இடத்திலிருந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம் 20 மீற்றர்கள் பள்ளத்தில் விழுந்துள்ளது.

முதியவருக்கு பலமான காயங்கள் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கு அடுத்ததாக நேற்று வாட் மாகாணத்தில் உள்ள Bex என்ற பகுதியில் 40 வயதான நபர் ஒருவர் பாராசூட்டில் பறக்க முயன்றுள்ளார்.

ஆனால், கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் தரையில் விழுந்து பரிதாபமாக உயிரை விட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் இதுபோன்று 173 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதால், இதில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது சுவிஸ் பொலிசாரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.​

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments