சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் குப்பை வீசுபவர்களுக்கு ரூ.45,000 அபராதம் விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் பொது இடங்களில் குப்பைகள் வீசுவதால், அதனை அகற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 200 மில்லியன் பிராங்க் செலவாகிறது.
இதனை தடுப்பதற்கு குப்பைகளை வீசும் நபர்கள் மீது அபராதம் விதிக்க ஒரு சில மாகாண அரசுகள் முன் வந்தது.
உதாரணத்திற்கு, ஜெனிவா மாகாணத்தில் குப்பைகளை வீசும் நபர் மீது 250 பிராங்க் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு சில மாகாணங்கள் அபராத தொகையை நிர்ணயம் செய்துள்ளன.
ஆனால், நாடு முழுவதிலும் அபராத தொகையை 3,00 பிராங்க் (15,132 இலங்கை ரூபாய்) என நிர்ணயம் செய்ய அரசு அண்மையில் முடிவு செய்தது.
இது தொடர்பாக, இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக 96 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 86 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம், நாடு முழுவதும் ஒரே அபராத தொகையை நிர்ணயம் செய்ய முடியாது.
ஆனால், தற்போது ஒரு சில மாகாணங்களில் விதிக்கப்படும் அபாரத தொகை அப்படியே நடைமுறையில் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.