சூரிச் படுகொலை: விடுமுறைக்கு சென்ற கைதியை தீவிரமாக தேடும் பொலிஸ்

Report Print Basu in சுவிற்சர்லாந்து
சூரிச் படுகொலை: விடுமுறைக்கு சென்ற கைதியை தீவிரமாக தேடும்  பொலிஸ்

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறையிலிருந்து விடுமுறைக்கு சென்ற கைதியை தீவரமாக தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை சூரிச்சின் Seefeld மாவட்டத்தில் 42 வயதுடைய ஒரு ஆண் படுகாயமடைந்த நிலையில் இறந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த வாரம் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இக்கொலை சம்வம் குறித்த பொலிசார் தற்போது வெளியிட்டுள்ள தகவலில், 23 வயதுடைய Tobias Kuster என்ற சிறை கைதிக்கும் இக்கொலைக்கும் தொடர்பு உள்ளது என பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த யூன் 23ம் திகதி சுற்றுலா விடுமுறைக்கு சென்ற Tobias Kuster இன்னும் சிறை திரும்பவில்லை என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கொலை நடந்த இடத்தில் பொலிசார் நடத்திய விசாரணையில் Tobias Kusterக்கு சம்பவத்தில் தொடர்புள்ள வகையில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வன்முறை குற்றங்கள் தொடர்பில் அவர் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டதாகவும். அவர் மேல் கொலை குற்றம் ஏதும் இல்லை, அவரின் நல்ல நடத்தை காரணமாக எதிர்வரும் 2017ம் ஆண்டு இறுதியில் அவரை விடுதலை செய்ய இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Tobias Kuster பல முறை பாதுகாப்புடன் சுற்றுலாவிற்காக விடுமுறையில் சென்றதாகவும், இம்முறை தான் பாதுகாப்பு இல்லாமல் விடுமுறையில் சென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவர் குறித்த தகவல் கிடைத்தால் சூரிச் பொலிசாருக்கு தகவல் கொடுக்கும் படி அறிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments