சுவிஸில் இறைச்சிக்கு கூடுதல் வரி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
சுவிஸில் இறைச்சிக்கு கூடுதல் வரி
448Shares

சுவிட்சர்லாந்தில் இறைச்சி உணவுகளின் மீதான மோகம் குறைந்து வரும் நிலையில் அதை மேலும் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இறைச்சிக்காக மிருகங்களை கொல்வது உலக வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டைவிடவும் சுவிட்சர்லாந்தில் இறைச்சி உணவு எடுத்துக்கொள்ளும் அளவு வெகுவாக சரிவை கண்டுள்ளது. ஆனால் அரசின் கணக்குகளின்படி கடந்த 2007-2013 ஆம் ஆண்டு வரையான காலகட்டங்களில் சராசரியாக 1.3 கிலோ மட்டுமே குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றது. சுவிஸில் ஆண்டொன்றுக்கு தனி நபர் ஒருவர் 60 கிலோ மாமிச உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர்.

மாமிச உணவுகளின் மீதான மோகம் சுவிஸ் மக்களில் குறைந்து வருவதாக கூறும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், இதே நிலையை மேலும் நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் புவி வெப்பமயமாவதை தடுக்க முடியும் எனவும் கருதுகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் மாமிச உணவு வகைகளை குறைத்து ஏழ்மை மற்றும் புவி வெப்பமயமாவுதல் உள்ளிட்டவைகளில் இருந்து காக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. மட்டுமின்றி மாமிச உணவு வகைகளுக்கு வரி விதிப்பது குறித்தும் ஐக்கிய நாடுகள் மன்ற நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இதேப்போன்று Greenpeace அமைப்பின் George Klingler மாமிச உணவுகள் மீது 20 முதல் 30% வரி விதிப்பதை கூட தாம் ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

சுவிஸில் கடந்த 1990 ஆம் ஆண்டு தனி நபர் ஒருவர் நாளொன்றுக்கு எடுத்துக்கொண்ட மாமிச உணவின் அளவு 228 கிராம், அது 2011 ஆம் ஆண்டின் ஆய்வுகளின்படி 205 கிராம் என குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments