ஒரு கோடி ரூபாய் பொருட்களை அள்ளிச்சென்ற திருடர்கள்!

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் வணிக வளாகம் ஒன்றில் நுழைந்த இரண்டு திருடர்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Zug நகருக்கு அருகில் உள்ள Neustadt என்ற பகுதியில் தான் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் கதவை உடைத்துக்கொண்டு இரண்டு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

உள்ளே நுழைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கண் கண்ணாடிகளை அள்ளி பெட்டியில் வைத்துள்ளனர்.

இந்த காட்சிகள் அனைந்தும் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. பொருட்களை திருடிய அவர்கள் எவ்வித இடையூறும் இன்றி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக கடை நிறுவனர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும், கொள்ளையர்கள் திருடிச்சென்ற கண்ணாடிகளின் மதிப்பு 70,000 பிராங்க்(1,03,84,635 இலங்கை ரூபாய்) இருக்கும் என்றும், இது தவிர்த்து கடை கண்ணாடிகளை உடைத்ததன் மூலம் கூடுதல் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

முகமூடி அணிந்திருந்த இரு கொள்ளையர்கள் தொடர்பாக அடையாளங்களை வெளியிட்டுள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments