நாடுகடத்த முயன்ற அதிகாரிகள்: அடுக்குமாடி ஜன்னலில் இருந்து குதித்த அகதி சிறுமி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதி சிறுமி ஒருவரை அதிகாரிகள் நாடுகடத்த முயன்றபோது சிறுமி ஜன்னல் வழியாக குதித்து படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று புகலிடம் கோரி சுவிஸில் உள்ள பேர்ன் மாகாணத்தில் வசித்து வருகிறது.

இந்நிலையில், டப்ளின் சட்டவிதிகள் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் எந்த நாட்டிற்கு முதலில் செல்கிறார்களோ அதே நாட்டில் தான் புகலிடம் கோர வேண்டும்.

இவற்றில் ஆப்கானிஸ்தான் குடும்பம் தோல்வி அடைந்துள்ளதால், அக்குடும்பத்தை வெளியேற்ற அரசு உத்தரவிட்டது.

Zweisimmen நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த அக்குடும்பத்தினரை அழைத்துச் செல்ல நேற்று காலை 7 மணியளவில் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

குடும்பத்தில் 15 வயதான சிறுமி ஒருவரும் இருந்துள்ளார். அப்போது குடும்பத்தினரை வெளியேற்றிக்கொண்டு இருந்தபோது சிறுமி திடீரென ஜன்னல் கதவுகளை திறந்து அங்கிருந்து குதித்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிகாரிகள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் பேசியபோது, சிறுமியின் உடல்நிலை சரியாகும் வரை அக்குடும்பத்தினரை நாடுகடத்தும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments