சுவிஸ் வீட்டில் பயங்கர வெடிபொருட்கள்: உரிமையாளர் அளித்த வினோத விளக்கம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பொலிசார் நடத்திய சோதனையில் பயங்கர வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Basel-Country மாகாணத்தில் உள்ள Arlesheim என்ற நகரில் 31 வயதான நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அண்மையில் தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தன்னுடையை பெயரை அப்துல்லா என மாற்றிக்கொண்டார்.

கடந்த நவம்பர் மாதம் பாரீஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக அப்துல்லா ஒரு பரபரப்பான கருத்தினை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பாரீஸ் நகரில் நிகழ்ந்துள்ள தாக்குதல் அவசியமான ஒன்று தான். பிரான்ஸ் நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சுவிஸ் பொலிசாரால் விசாரணைக்கு உட்பட்டு அவர் தொடர்பான தகவல்கள் பொலிசாரிடம் உள்ளன.

இந்நிலையில், அப்துல்லா வீட்டில் வெடிபொருட்கள் உள்ளதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் நேற்று அதிரடியாக அவரது வீட்டை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, வீட்டிற்குள் 800 கிராம் எடையுள்ள பாஸ்பரஸ் இருந்துள்ளதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதனை பயன்படுத்தி பயங்கர வெடிகுண்டுகளை தயாரிக்க முடியும்.

அப்துல்லாவை கைது செய்து விசாரணை செய்தபோது ‘நான் ஒரு விஞ்ஞானியாக முயற்சி செய்கிறேன் என்றும், இதனை சட்டப்பூர்வமாக வாங்கி தற்போது வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளதால், இது முழுக்க முழுக்க அறிவியல் தொடர்பான முயற்சி என விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அப்துல்லாவிற்கு ஆதரவு இருப்பதாக பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால், வெடிபொருட்களை பறிமுதல் செய்து தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments