தாயின் கண் முன் மலையில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
977Shares
977Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்து நாட்டில் மலையில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக ஹெலிகொப்டர் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளது.

பேர்ன் மாகாணத்தில் உள்ள ஓபர்லேண்ட் பகுதியில் நேற்று முன் தினம் தாய் மற்றும் 4 வயது மகன் ஆகிய இருவரும் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, விளையாடிக்கொண்டு இருந்த 4 வயது குழந்தை திடீரென தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக ராகா மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் பெற்று மருத்துவருடன் மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டரில் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஆனால், பள்ளம் மிகவும் குறுகிய அளவில் இருந்ததால் ஹெலிகொப்டர் கீழே இறங்க முடியவில்லை.

முயற்சியை தளரவிடாத மீட்புக்குழுவினர் மருத்துவருடன் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கியுள்ளனர்.

பள்ளத்தில் பலத்த காயங்களுடன் இருந்த குழந்தைக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments