சுவிஸ் சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து: பெண் உட்பட இருவர் பலி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் இளம்பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள St. Gallen மாகாணத்தில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இதே மாகாணத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவர் காரில் பயணம் செய்துள்ளார்.

சூரிச் நோக்கி செல்லும் A53 நெடுஞ்சாலையில் பயணித்த அவர் காரையும் அவரே இயக்கியுள்ளார்.

இந்நிலையில், Rapperswil என்ற பகுதிக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென எதிர் சாலையில் நுழைந்துள்ளது.

அப்போது எதிர் திசையில் அசுர வேகத்தில் வந்த கார் மீது பெண்ணின் கார் பயங்கரமாக மோதியுள்ளது.

நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.

மேலும், இரு கார்களில் பயணம் செய்த இளம்பெண் மற்றும் 42 வயதான ஆண் ஓட்டுனர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

இளம்பெண்ணின் கார் எதனால் எதிர் சாலையில் நுழைந்துச் சென்றது என்ற காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments