தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் முதியவரின் சடலம்: விபத்தா? தற்கொலையா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தண்டவாளம் ஒன்றில் முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள பெர்ன் நகர தண்டவாளத்தில் தான் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை நேரத்தில் ரயில் நிலைய பொலிசாருக்கு அவசர தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில், ‘தண்டவாளத்தில் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் கிடப்பதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் பெற்ற பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு, தண்டவாளத்தில் கிடந்த சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முதியவருக்கு 70 வயது இருக்கலாம் என்றும் அவர் இதே நகரை சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

முதியவரின் உடல் சிதைந்துள்ளதால் அவர் ரயில் மீது மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

ஆனால், முதியவர் தற்கொலை செய்தாரா? அல்லது எதிர்பாராத விபத்தில் ரயில் மோதி இறந்தாரா? என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

பெர்ன் தண்டவாளத்தில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments