மதுபோதையில் 10 வயது சிறுவன் மீது கார் ஏற்றி கொன்ற முதியவர்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் 10 வயது சிறுவன் மீது கார் ஏற்றி கொன்ற முதியவர் நிச்சயம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள பெர்ன் நகரை சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு காரில் வெளியே சென்றுள்ளார்.

அப்போது, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் சாலையில் கடக்க முயன்ற 10 வயது சிறுவன் மீது காரை மோதியுள்ளார்.

கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட முதியவர் மீது விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

மேலும், முதியவரின் மீதான குற்றத்திற்கு நீதிமன்றம் 36 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால், எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்திற்கு 36 மாதங்கள் கடுமையான தண்டனை எனக்கூறிய முதியவரின் வழக்கறிஞர், தண்டனை காலத்தை 12 மாதங்களாக குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, 36 மாத தண்டனையை பாதியாக குறைத்து 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments