சுவிஸில் பேருந்து முழுவதும் நிர்வாண ஆண்கள்! காரணம் என்ன? பரபரப்பு வீடியோ

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஓடும் பேருந்து முழுவதும் ஆண்கள் நிர்வாணமாக இருந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகியுள்ளது.

சூரிச் A1 நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்திலே நிர்வாண கொண்டாட்டம் நடந்துள்ளது.

குறித்த நெடுஞ்சாலையில் வேறொரு வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர், பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

இதன் போது பேருந்தில் உள்ள ஆண்கள் அனைவரும் நிர்வாணமாக கொண்டாடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்த பேருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபர் கூறியதாவது, பேருந்தில் இருந்த ஆண்கள் அனைவரும் சுவிஸ் ரக்பி அணி வீரர்கள்.

நாங்கள் முன்னரே சாம்பியன்ஷிப் போட்டியை விளையாடிவிட்டோம். அதன் கொண்டாட்டமே பேருந்தில் நடந்தது.

இந்த கொண்டாட்டத்தில் ஓட்டுநரை தவிர்த்து அனைத்து வீரர்களும் கலந்து கொண்டனர்.

ஆனால், நீங்கள் கருதுவது போல் நாங்கள நிர்வாணமாக இல்லை. மேலே ஆடை இல்லாமலே இருந்தோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments