விபத்தில் சிக்கி பலியான நபர்: ஓட்டுனரை கண்டுபிடித்தால் ரூ.4 லட்சம் பரிசு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் விபத்தில் சிக்கி மகன் பலியானதை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் தொடர்பாக தகவல் அளிப்பவருக்கு ரூ.4 லட்சம் பரிசு வழங்கப்படும் என தாயார் அறிவித்துள்ளார்.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Lyssach என்ற நகரில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இதே நகரில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்தாண்டு அக்டோபர் 22-ம் திகதி காரில் வெளியே சென்றுள்ளார்.

சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென எதிர் திசையில் தடம்புரண்ட நிலையில் ஒரு கார் அதிவேகத்தில் வந்துள்ளது.

சற்றும் எதிர்ப்பார நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வாலிபரால் சுதாரித்துக்கொள்ள முடியவில்லை.

அசுர வேகத்தில் வந்த கார் வாலிபரின் ஆடி கார் மீது மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனளிக்காமல் 3 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் பலியானார்.

மகன் பலியானதை தொடர்ந்து பெற்றோர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் இதுவரை சிக்கவில்லை.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் பெற்றோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘விபத்து ஏற்படுத்தி மகன் இறப்பதற்கு காரணமாக இருந்த ஓட்டுனர் குறித்து தகவல் அளிப்பவருக்கு 3,000 பிராங்க்(4,41,180 இலங்கை ரூபாய்) பரிசாக வழங்கப்படும்’ என பெற்றோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments