குக்கூ கடிகாரம்! இது தொடங்குனது சுவிஸ்ல இல்லையாம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

உலகம் ஓடும் வேகத்தில் கடிகாரத்தில் நேரம் பார்த்து தங்களின் வேலையை பலர் திட்டமிட்டு கொள்கின்றனர்.

அப்படி பலருக்கும் உபயோகப்படும் கடிகாரத்தின் முக்கிய மற்றும் பிரபலமான வகை தான் மணிக்கு ஒரு முறை குருவி போல அலாரம் அடிக்கும் குக்கூ கடிகார வகையாகும்.

இந்த வகையான கடிகாரங்கள் சுவிற்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக பலர் நினைக்கின்றனர்.

அது தான் இல்லை! ஜேர்மனி நாட்டின் Bavaria மாநிலத்தில் தான் இது முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

பெரும்பாலும் இயந்திரத்தால் செய்யப்படும் இந்த வகை கடிகாரத்தை 200,000 என்ற கணக்கில் தயாரித்து Bavaria முதலிடம் வகிக்கிறது.

சுவிற்சர்லாந்தை பொருத்தவரை Lotscher என்ற நிறுவனம் 30,000 மரத்திலான கடிகாரங்களை வருடத்திற்கு தயாரிக்கிறது.

அதே போல Koo என்னும் சுவிஸ் நிறுவனம் வருடத்துக்கு வெறும் 400 குருவி அலார கடிகாரங்களை மட்டுமே தயாரிக்கிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments