சுவிஸில் பெர்லின் தாக்குதல்தாரி: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

பெர்லின் தாக்குதல்தாரி Anis Amri சுவிஸில் வாழ்ந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anis Amriயின் சகோதரரான Walid Amri பிரபல பத்திரக்கையான the Sundayவிடம் பேசியதாவது, கொல்லப்பட்ட Anis Amri 2015ம் ஆண்டு மே மாதம் இரண்டு வாரம் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்ததாக கூறியுள்ளார்.

Anis Amriயின் சகோதரி Newja கூறியதாவது, Anis Amri சுவிஸில் வேலை தேடியதாகவும், பின்னர், சுவிஸ் பொலிஸின் சோதனைக்கு பயந்து ஜேர்மனிக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

New York Times வெளியிட்டுள்ள செய்தியில், பெர்லினில் தாக்குதல் நடத்துவதற்கு முன் யூலை மாதம் Anis Amri ஜேர்மனியில் இருந்து பேருந்தில் சூரிச் நகரத்திற்கு பயணித்ததாகவும், பயணத்தின் போது ஜேர்மனி பொலிசார் நடத்திய சோதனையில் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, துனிசியா அவரது அடையாள அட்டைகளை வெளியிட மறுத்ததை அடுத்து அவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சுவிஸ் அதிகாரிகளின் தகவல் படி, சுவிஸ் மண்ணில் Anis Amri வாழ்ந்ததற்கான பதிவே இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments