மதுபோதையில் விமானப் பயணி அடாவடி: நடுவானில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு விமானத்தில் செய்த அடாவடிச் செயல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சூரிச் நகரில் இருந்து United Airlines விமானத்தில் அமெரிக்க தலைநகரமான வாஷிங்டனுக்கு அண்மையில் புறப்பட்டுள்ளார்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர், இருக்கையில் அமராமல் அங்கும் இங்கும் தள்ளாடி நடந்து திரிந்துள்ளார்.

பயணியின் செயலை விமானப்பணிபெண்கள் கண்டித்துள்ளனர், மேலும், இருக்கையில் அமருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், இதனை கண்டுக்கொள்ளாத அந்நபர் கையில் மது பாட்டிலை எடுத்துக்கொண்டு விமானத்தின் பின்பகுதிக்கு சென்றுள்ளார்.

மேலும், அங்கு சென்று மதுபாட்டிலை திறந்து மது அருந்த முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணிப்பெண்கள் அவரை தடுக்க முயன்றுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நபர் கையில் வைத்திருந்த மதுபாட்டிலால் அவர்களை தாக்க முயன்றுள்ளார். நிலைமையை உணர்ந்த விமானக் குழுவினர் அவரை தூக்கிச்சென்று இருக்கையில் அமர வைத்து கட்டிப் போட்டுள்ளனர்.

சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் வாஷிங்டன் நகரில் தரையிறங்கியதும் அவரை பொலிசார் கைது செய்தனர்.

மேலும், விமானத்தில் தகராறில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக United Airlines விமானத்தில் வாழ்நாள் முழுக்க பயணம் மேற்கொள்ள தடை விதிப்பதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments