அரசாங்கத்திற்கு ரூ.5 கோடி இழப்பு ஏற்படுத்திய வெளிநாட்டு சுற்றுலா பயணி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணி ஒருவர் அந்நாட்டு அரசிற்கு ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸில் சுற்றுலா சென்றுள்ளார்.

சுவிஸின் Nidwalden மாகாணத்தில் உள்ள Engelberg என்ற நகரில் தங்கியிருந்தபோது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதியவரின் உடல்நிலை உடனடியாக குணமாகாத நிலையில் அவர் அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

மேலும், மருத்துவமனை சிகிச்சைக்கு தேவையான அனைத்து கட்டணங்களை அந்நகராட்சி தான் செலுத்தி வந்துள்ளது.

தற்போது சிகிச்சை முடிந்து முதியவர் அவரது தாய்நாட்டிற்கு திரும்பி உள்ள நிலையில், அவருக்கு தேவையான சிகிச்சை கட்டணமான 3,48,900 பிராங்கை(5,28,67,371 இலங்கை ரூபாய்) அரசு செலுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டு சட்டப்படி, அந்நாட்டில் நிரந்தர குடியிருப்பு அனுமதி இல்லாத ஒரு வெளிநாட்டு பயணி தங்கியிருக்கும்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதற்கான செலவுகளை சுவிஸ் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments