தனியாக சென்ற பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர்: இறுதியில் நிகழ்ந்த அதிரடி சம்பவம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் தனியாக சென்ற இளம்பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கற்பழிக்க முயன்றபோது நிகழ்ந்த அதிரடி சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Rathausgasse என்ற பகுதியில் தான் இந்த துணிகரச் செயல் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இளம்பெண் ஒருவர் தனியாக சாலையில் நடந்துச் சென்றுள்ளார்.

அப்போது, பெண்ணை மர்ம நபர் ஒருவர் நீண்ட தூரம் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

தனக்கு பின்னால் சந்தேகத்திற்குரிய நபர் வருவதை அறிந்த இளம்பெண் அங்கிருந்து வேகமாக நடக்க முயன்றுள்ளார்.

ஆனால், பெண் தப்பிக்க முயல்வதை உணர்ந்த நபர் பாய்ந்துச் சென்று பெண்ணை கீழே தள்ளியுள்ளார்.

பின்னர், தன்னுடைய ஆடைகளை நீக்க முயன்ற நபரை பெண் கடுமையாக எதிர்த்து போராடியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது பலம் முழுவதையும் திரட்டிய அப்பெண் நபரை உதைத்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

சிறிது தூரத்தில் 5 வாலிபர்கள் நடந்து வருவதை பார்த்த பெண் அவர்களிடம் நிலைமையை கூறியுள்ளார். உடனடியாக ஐவரும் அப்பகுதிக்கு விரைந்துச் சென்றுள்ளனர்.

ஆனால், ஆபத்தை உணர்ந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து மாயமாக தப்பியுள்ளார்.

இத்தாக்குதலை தொடர்ந்து இளம்பெண் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தன்னை கற்பழிக்க முயன்ற நபருக்கு 30 முதல் 40 வயது இருக்கலாம் என்றும், அடர்ந்த தாடியுடன் இருந்த நபர் தென் அமெரிக்காவை சேர்ந்தவராக இருக்கலாம் என பெண் கூறியுள்ளார்.

பெண்ணிடம் புகாரை பெற்ற பொலிசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments