மருத்துவமனைகளில் ட்ரோன் விமானம் பயன்படுத்தும் சேவை தொடங்கியது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மருத்துவமனை பரிசோதனை முடிவுகளை வான்வழியாக விரைவாக கொண்டு செல்ல ட்ரோன் விமானங்களை பயன்படுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Lugano நகரத்தில் முதன் முதலாக வணிக ரீதியாக இந்த ட்ரோன் விமான வசதி தொடங்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் இந்நகரில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு இடையே இந்த வான்வழி போக்குவரத்தை சுவிஸ் போஸ்ட் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்டமாக இரண்டு மருத்துவமனை ஆய்வு கூடங்களில் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் ட்ரோன் எனப்படும் சிறிய விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் மூலம் எவ்வித தடையுமின்றி விரைவாக மருத்துவ ஆய்வு முடிவுகள் உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

எனினும், ஆரம்பக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பதாக இருந்தாலும் கூட இந்த வசதி மேம்படுத்தப்படும் என சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மேலும், 2018-ம் ஆண்டிற்குள் இச்சேவை முழுமையாக அனைத்து நகரங்களிலும் சிறைப்பாக செயல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments