வித்தியாசமான நிகழ்வொன்று சுவிஸில் இடம்பெற்றுள்ளது

Report Print Thayalan Thayalan in சுவிற்சர்லாந்து
1693Shares
1693Shares
ibctamil.com

ஐரோப்பாவில் வித்தியாசமான நிகழ்வொன்று நேற்று(17) திங்கட்கிழமை சுவிஸில் செங்காளனில் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் பெருமளவிலான அந்தணப் பெருமக்கள் வாழ்கின்றனர். அந்தணப் பெருமக்களால் கொண்டாடப்படும் உபநயன சடங்கு நிகழ்வே நேற்று வித்தியாசமான முறையில் செங்காளனில் இடம்பெற்றுள்ளது.

செங்காளன் சென் மாக்கிரத்தன் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ பா.ஜோதிநாதக் குருக்கள், தனது புத்திரன் ஐயதர சர்மாவுக்கு பூநூல் சடங்கை தமது உறவினர்கள் மற்றும் புலம் பெயர் மக்களுடன் இணைந்து நடத்தினார்.

ஐரோப்பாவில் சுவிஸில் முதல் தடவையாக பொது மக்கள் பூநூல் சடங்கின் தாற்பரியத்தை அறியும் வகையில் றோசாக் எனும் இடத்தில் மண்டபம் ஒன்று தேர்வு செய்தனர்.

அந்த மண்டபத்தின் மேடையில் நாதஸ்வர, தவில் வாத்திய இசை முழங்க முற்பகல் 11 மணி சுப நேரத்தில் ஐயதர சர்மாவுக்கு பூநூல் அணிவித்து வைக்கப்பட்டது.

இந்தச்சடங்குக்கான ஆரம்ப கிரியைகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென் மார்க்கிரத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் லட்சுமி பூஜையுடன் பக்திமயமாக இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை காலை முதல் கிரியைகள் சிறப்புற நடைபெற்றன. சில மூத்த குருமார்கள் இணைந்து இந்தக்கிரியைகளை நடத்தியிருந்தனர்.

சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் நிகழ்வை கண்டு களித்தனர்.

தாயகத்தில் இத்தகைய நிகழ்வு ஆலயங்களிலே இடம்பெற்று வருகின்றது. ஆனால் ஐரோப்பாவில் முதல் தடவையாக, சுவிஸில் பிரத்தியேக மண்டபம் எடுத்து அதில் இந்த நிகழ்வை நடத்தி, பொதுமக்கள் இந்த நிகழ்வின் தாற்பரியத்தை அறிய வாய்ப்பு கிட்டியதாக மக்கள் தெரிவித்தனர்.

தகவல்,

கதிர்வேலாயுதசுவாமி ஆலயம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments