இளைஞர்களின் விருந்து கொண்டாட்டத்தில் விபரீதம்: 18 பேர் படுகாயம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மணடலத்தில் இளைஞர்கள் சிலர் விருந்துக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 18 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் உள்ள வோலென் பகுதியில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் 17 பேர் விருந்து கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு டிராக்டர் ஒன்றில் இணைக்கப்பட்ட டிரெய்லரில் பயணமாகியுள்ளனர்.

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் குறித்த வாகனமானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் அமைந்துள்ள பள்ளத்தில் சரிந்துள்ளது. இதில் சாரதி உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனிடையே விபத்து நடந்த Hochwachtstrasse பகுதியை பலமணி நேரம் மூடி வைத்திருந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers