24 குதிரைகளை தீயிட்டு எரித்து கொன்ற நபர் கைது

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் 24 குதிரைகளை தீயிட்டு எரித்து கொன்றதாக சந்தேகப்படும் நபர் ஒருவரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Avenches என்ற பகுதியில் கடந்த 15-ம் திகதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பண்ணையில் அடைக்கப்பட்டு இருந்த குதிரைகளில் 24 குதிரைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளன.

இதுமட்டுமில்லாமல், பல்வேறு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் இது திட்டமிடப்பட்ட சதி என பொலிசார் சந்தேகம் அடைந்தனர்.

பொலிசார் விசாரணை நடத்தியபோது தீவிபத்து ஏற்பட்டபோது அதனை அணைக்கப் போராடிய 20 வயது மதிக்கதக்க நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

எனினும், பண்ணையில் அவருக்கு சொந்தமான குதிரை ஒன்றும் தீயில் கருகி உயிரிழந்துள்ளது.

ஆனால், அவரிடம் விசாரணை நடத்தியபோது பொலிசாருக்கு மேலும் சந்தேகம் அதிகரித்ததால் அவரை தற்போது கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

இதுக் குறித்து பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், 24 குதிரைகள் உயிரிழக்க காரணமாக இருந்ததாக சந்தேகப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்