அதிகாலையில் கூட்டத்திற்குள் பாய்ந்த கார்: பரிதாபமாக பலியான நபர்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
501Shares
501Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்து நாட்டில் கூட்டத்திற்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுவிஸில் உள்ள லூசேர்ன் நகரில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் சாலையில் மூவர் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று மூன்று பேர் மீதும் பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல சென்றுள்ளது.

இவ்விபத்தில் 37 வயதான நபர் சம்ப்வ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த இருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் பெற்ற பொலிசார் காரை மடக்கி பிடிக்க புறப்பட்டுள்ளனர். எனினும், இதற்கு முன்னதாகவே தகவல் பெற்ற ரோந்து பொலிசார் காரை வழிமறைத்து பிடித்துள்ளனர்.

மேலும், காரில் இருந்த இரண்டு வாலிபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாக காரை ஓட்டியதும், காரை திடீரென கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்