புகலிடம் வழங்க அரசு மறுத்ததால் ரயில் முன்னர் பாய்ந்து அகதி தற்கொலை

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் புகலிடம் கோரிய தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்த திபெத்தியர் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் உள்ள Emmenbrucke ரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன்னர் பாய்ந்து கடந்த வாரம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்தவர் அருகில் இரண்டு கடிதங்களும் சிக்கியுள்ளது, முதலில் அவர் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில் தற்போது அவர் ஒரு திபெத்தியர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் பெயர் Tashi Namgyal என கூறப்படும் வேளையில், சுவிசில் நிரந்தரமாக புலம்பெயர அவர் பலமுறை விண்ணப்பித்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் Tashi தற்கொலை செய்து கொண்டுள்ளார், அவர் இறப்பதற்கு முன்னர் கடிதத்தில் எழுதிய விவரங்களை சுவிஸில் இருக்கும் திபெத்திய சமூகத்தின் தலைவர் வெளியிட்டுள்ளார்.

திபெத்திய பிரச்சனைகளை ஐ.நா கவனத்தில் கொள்ள வேண்டும் என Tashi கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதோடு, சுவிஸில் தஞ்சம் கோரும் திபெத்தியர்களுக்கு புகலிடம் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியுள்ளார்.

500 திபெத்தியர்களின் புகலிட விண்ணப்பங்களை சுவிஸ் அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் 7,000 திபெத்தியர்கள் சுவிஸ் முறையை ஒருங்கிணைத்து சட்டப்பூர்வ குடிமக்களாகவும் வாழ்கின்றனர்.

சுவிஸ் அதிகாரிகள் கூறுகையில், திபெத்தியர்களுக்கு புகலிடம் வழங்குவதில் அரசின் கொள்கை மாறாமல் உள்ளது.

ஆனால், பாதுகாப்பு பிரச்சனை இல்லாத பகுதியிலிருந்து வரும் திபெத்தியர்கள் அது குறித்த தகவலை மறைத்தால் அவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட மாட்டாது என கூறியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers