உலகின் நம்பர் 1 பணக்கார நாடு என்ற அந்தஸ்தை இழந்த சுவிட்சர்லாந்து

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
707Shares
707Shares
lankasrimarket.com

தனிநபரின் நிகர சொத்துக்கள் அடிப்படையில் சுவிட்சர்லாந்தை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிதி சேவைகள் நிறுவனமான Allianz 2016-க்கான உலகின் பணக்கார நாடுகள் குறித்த ஆய்வை நடத்தியது.

இதில் தனிநபர் நிகர சொத்துக்கள் அடிப்படையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

2015-க்கான பட்டியலில் முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து இந்த பட்டியலில் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

2015-லிருந்து 2016-ல் அமெரிக்க தனிநபர் நிகர சொத்து 5.8 சதவீதமாக அதிகரித்து €177,210 ஆக உள்ளது.

அதே போல சுவிட்சர்லாந்தின் தனிநபர் நிகர சொத்து 2.7 சதவீதமாக அதிகரித்து €175,720(CHF201,100) ஆக உள்ளது, பட்டியலில் மூன்றாமிடம் ஜப்பானுக்கு( €96,890) கிடைத்துள்ளது.

ஆனால் தனிநபர் மொத்த சொத்துக்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் €268,840 என்ற சராசரி கணக்கில் நீடிக்கிறது, இரண்டாமிடத்தில் அமெரிக்கா €221,690-யுடன் உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்