மூச்சுவிட திணறிய பள்ளி குழந்தைகள்... மூடப்பட்ட பள்ளிக்கூடம்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
264Shares
264Shares
lankasrimarket.com

பள்ளிக்கூடத்தில் இருந்த மாணவர்கள் பலர் மூச்சு விட திடீரென சிரமப்பட்ட நிலையில் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சுவிட்சர்லாந்தின் Volketswil நகராட்சியில் Lindenbuel என்ற பெயரில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.

இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில் 35-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று திடீரென சுவாச பிரச்சனை ஏற்பட்டு மூச்சு விட சிரமப்பட்டனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் பள்ளியிலிருந்து வெளியேற்றி அருகிலிருந்த உடற்பயிற்சி கூடத்தில் தங்கவைத்தனர்.

இதையடுத்து பள்ளிக்கூடம் மூடப்பட்டது. சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது

ரசாயன நிபுணர்கள் குறித்த பள்ளிக்கு சென்று சோதனை செய்ததில் எந்தவொரு பொருளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

சுவாச பிரச்சனை எப்படி ஏற்பட்டது என இன்னும் தெரியாத நிலையில், சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்துக்கு பிறகு பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்