குடும்ப உறவுகளால் கடும் துன்புறுத்தல்களுக்கு இரையாகும் சுவிஸ் சிறார்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
458Shares
458Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு சிறார் குடும்ப உறவுகளால் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் குறித்த தகவலானது வெளியாகியுள்ளது.

குடும்ப உறவுகள் குழந்தைகளை உயரிய நிலையில் பேணுவதற்கு அடிப்படை காரணிகளாக கருதப்படுவது அந்த குடும்பத்தின் நிதி ஆதாரமே எனவும் குறித்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டுமின்றி அரசு உதவிகளை மட்டுமே நாடியுள்ள குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு மிக அருகாமையில் உள்ள குடும்பங்களில் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் இருமடங்காக உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் குறித்த ஆய்வறிக்கை எடுத்துக் கூறுகின்றது.

மாசிடோனியா, கொசோவோ மற்றும் செர்பியா நாட்டவரான பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளில் 40 விழுக்காட்டினர் குடும்ப உறவுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

மட்டுமின்றி போர்த்துகீசிய பாரம்பரியம் கொண்ட குடும்பங்களில் பெரும்பாலான சிறார்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

மேலும் ஐந்தில் 2 சிறாருக்கேனும் கன்னத்தில் அறைவது அல்லது காதை திருகுவது போன்ற செய்கைளாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒட்டுமொத்த சிறார்களில் 20 விழுக்காட்டினர் குடும்ப உறவுகள் தரும் கொடூரமான அச்சுறுத்தல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 42.3 விழுக்காட்டினர் சுமாரான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சூரிச் பல்கலை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மட்டுமின்றி 37 விழுக்காடு குழந்தைகள் பெற்றோரால் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி மிக பரிவோடு வளர்க்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்