பணத்திற்காக கடத்தப்பட்ட சுவிஸ் குடிமகள்: அரசு விடுத்த எச்சரிக்கை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
280Shares
280Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சூடான் நாட்டில் பணத்திற்காக கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சூடானில் உள்ள Darfur மாகாணத்தில் தங்கி நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் அரசு சூடான் அரசுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், ‘பணத்திற்காக சுவிஸ் குடிமகள் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும்,எவ்வித நிபந்தனையும் இன்றி பெண் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் கடத்தல் கும்பல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுவிஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து சூடான் அரசு சுவிஸ்அரசுக்கு பதில் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில்,கடத்தப்பட்ட பெண்ணை தீவிரமாக தேடிவருவதாகவும், எவ்வித நிபந்தனைகள் இன்றிஅவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என உறுதி அளித்துள்ளது.

சூடான் நாட்டில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தை அடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால பொருளாதார தடையை அமெரிக்கா சில தினங்களுக்கு முன்னர் நீக்கியதை தொடர்ந்து இக்கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்