சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தாயகத்தில் கல்வி உதவித்திட்டங்கள்

Report Print Thayalan Thayalan in சுவிற்சர்லாந்து
109Shares
109Shares
Seylon Bank Promotion

செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தினர் தாயகத்தில் மேற்கொண்டுவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் உதவி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கண்பார்வை குறைந்த 12 மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவரும் ஆன்மீகவாதியுமான முருகசிரோன்மணி வேலுப்பிள்ளை கணேசகுமார் நேரில் பிரசன்னமாகி இவ்வுதவிகளை வழங்கினார்.

வலிவடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் ச.சஜீபன் ஏற்பாட்டில் முதலாவது நிகழ்வு ஒட்டுசுட்டான் ஒலுமடு கிராம முன்னேற்றச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

பெற்றோரை இழந்த பாடசாலை செல்லும் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வேலுப்பிள்ளை கணேசகுமார் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுமக்களும் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டு மையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கண்பார்வை குறைந்த 12 மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளை வேலுப்பிள்ளை கணேசகுமார் வழங்கினார்.

மையத்தின் தவிசாளர் திரு.இ.சாந்தசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொத்துவில் மெதடிஸ்த்த தமிழ்க்கலவன் மகாவித்தியாலயம், விபுலாநந்த வித்தியாலயம், இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கணேசகுமாருடன் தமிழக கஸ்ரிபாய் குருகுலத்தின் தலைவர் வேதாரணியம் வேதரட்ணம், பாம்பன்சுவாமி ஆச்சிரமத்தலைவர் துரைக்கண்ணு தயாளன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பொத்துவில் சிவமானிட ஒன்றிய அமைப்பாளர் பா.கந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஏத்தம் பாடசாலை அதிபர் சோபியா தர்மதாஸ, கிராமசேவையாளரகளான் இ.குணசீலன், திருமதி நிரஞ்சனி சமந்த பிரசாத், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜீவா தாவீதுராஜா, கிராம முன்னேற்றச்சங்கத்தலைவர் க.கஜேந்திரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்திடாக விதவைகள் மறுவாழ்வு உதவி கல்வி உதவி, வாழ்வாதார உதவி என பல்வேறு திட்டங்கள் நீண்டகாலமாக செயற்படுத்தி வந்தபோதும் முதற்தடவையாக ஆலயத்தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் இம்முறை தான் நேரடியாகச் சென்ற உதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்