சாலையில் சென்றவர்களை கோடாரியால் தாக்கி காரை திருடி சென்ற சிறுவன்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து

சாலையில் சென்றவர்களை கோடாரியால் தாக்கி விட்டு அங்கிருந்த காரை திருடி சென்ற 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Flums நகரில் உள்ள town square-ல் இச்சம்பவம் அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு நடந்துள்ளது.

17 வயதான சிறுவன் ஒருவன் சாலையில் சென்றவர்களை கையில் வைத்திருந்த கோடாரியால் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளான்.

பின்னர் அங்கிருந்து காரை திருடி சென்ற நிலையில், குறித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிறுவனை கைது செய்தார்கள்.

சிறுவன் லாத்வியா நாட்டை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது, கைது நடவடிக்கையின் போது சிறுவனை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் காயமடைந்தான்.

கோடாரி தாக்குதலில் எத்தனை பேர் காயம் அடைந்தார்கள் மற்றும் அவர்களின் காயம் குறித்த விபரங்களை பொலிசார் தெரிவிக்கவில்லை.

இச்செயலை சிறுவன் தனியாக செய்தான் எனவும், இதில் எந்தவொரு பயங்கரவாத பின்னணிக்கான தடயங்கள் இல்லை எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்