கோடாரியால் தாக்கிய இளைஞன் மனநோயாளியா? பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கடந்த ஞாயிறு அன்று சாலையில் சென்ற 7 பேரை கோடாரியால் தாக்கிய இளைஞன் மனநோயாளியாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் தொடர்பில் St Gallen மாகாணத்தில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மதிப்பீடு மேற்கொண்டதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறித்த இளைஞன் பொதுமக்கள் மீது எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர்.

இருப்பினும், இளைஞனின் பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த வன்முறை தொடர்பான கருத்துகளை தற்போதைய கோடாரி தாக்குதல் சம்பவத்தில் இணைத்துப் பார்க்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு அன்று பொதுமக்கள் 7 பேரை கோடாரியால் தாக்கிய சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது வரை குறித்த இளைஞன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிறு இரவு உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் குறித்த இளைஞன் தம் வசமிருந்த கோடாரியால் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.

இதில் 7 பேர் காயமடைந்தனர். உரியிருக்கு ஆபத்தான நிலையில் எவரும் இல்லை என்ற போதும் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்கான காரணம் ஏதும் இதுவரை தெரியாத நிலையில், பயங்கரவாத பின்னணி ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் லாத்வியா பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸ் வந்துள்ளார். தற்போது தொழிற்பயிற்சி மேற்கொண்டும் வருகிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers