சுவிட்சர்லாந்தில் அதிக மனச்சோர்வுக்கு உள்ளாகும் மக்கள்: இந்த மாகாணத்தில் அதிகம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் மொத்த மக்கள் தொகையில் 5.5 விழுக்காடு மக்கள் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிஸ் மத்திய பொது சுகாதார அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஆய்வறிக்கையில், ஜேர்மன் மொழி பேசும் மக்களிடையே தான் அதிக மனச்சோர்வு நோய் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதில் மிக அதிகமாக சூரிச் மாகாணத்தில் 6.2 விழுக்காடு மக்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு அடுத்த நிலையில் Schwyz (6.1%) மாகாணம் உள்ளது. Aargau மாகாணத்தில் 5.8 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மிகவும் குறைந்த விழுக்காடு Uri (1.6%) மற்றும் Appenzell Ausserrhoden (2.4%) மாகாணங்களில் என குறித்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் மேற்கு சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள பெரும்பாலான மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 9 விழுக்காடு மக்கள் கடும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

டிசினோ மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகம் கொண்ட மாகாணங்களில் வேலைவாய்ப்பின்மை, அதிக மணமுறிவு உள்ளிட்ட காரணிகளால் அங்குள்ள மக்கள் அதிக மனச்சோர்வுக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்