சுவிட்சர்லாந்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார பெருவிழா

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
134Shares
134Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா பக்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த விரதம் வாழ்வில் மகத்தான பலன்களைத் தரும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கையாகும்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் புனித நெறிகளைப் போற்றி வாழும் சுவிற்சர்லாந்து தமிழ்மக்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு செங்காலன் மாநிலத்தில் சென்மார்க்கிறேத்தன் திருத்தலத்தில் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தை நிறுவியுள்ளனர்.

அன்று முதல் இன்று வரை வழிபாடு செய்து வருகின்றனர். எனினும், பக்தர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வழிபாட்டிற்கு மட்டுமன்றி இடம்பெயர்ந்த தமிழர்களின் ஒருங்கிணைப்புக்கும் இடர்பாடுகளுக்கு உள்ளான.

தமிழர்களின் இன்னல்களைப் போக்கும் சமூகப் பணிகளுக்கும் முக்கியத்துவம் தந்து இந்த ஆலயம் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டிலிருந்து வருகைபுரிந்த பேராசிரியர் டாக்டர் வே. சங்கரநாராயணன் தினமும் விரதங்களின் மகிமை குறித்து விரிவுரைகள் நிகழ்த்தினார். அவர் ஆற்றிய பேருரைகள் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தன.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த இசைத்துறை இரட்டையர்கள் பிரபல பின்னணிப்பாடகர் ஹைதராபாத் சிவா மற்றும் மிருதங்க வித்வான் தில்லை ஸ்தானம் ஆர். சூரியநாராயணன் பக்தி இன்னிசை வழங்கி அனைவரையும் பரவசப்படுத்தினர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்