பெர்ன் பல்கலைகழகத்தில் பயிலும் திருநங்கைகளின் மன வேதனை

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
224Shares
224Shares
lankasrimarket.com

பெர்ன் பல்கலைகழத்தில் பயின்று வரும் திருநங்கைகள், அங்கு தங்களுக்கு ஏற்படும் அவமானங்கள் மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

பெர்ன் பல்கலைகழகத்தில் சுமார் 80 திருநங்கைகள் படித்து வருகின்றனர். இவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் அடங்கிய முழு தகவல்களை ஏற்றுக்கொள்வதில் பல்கலைக்கழகம் வேறுபாடு காட்டி மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கிறது என அங்கு படிக்கும் திருநங்கைகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து Sascha என்ற திருநங்கை கூறியதாவது, என்னுடைய பழைய பெயர் ஆண் பெயராக இருக்கும். தற்போது பெண் பெயரை மாற்றி பல்கலைகழகத்தில் கொடுத்துவிட்டேன்.

ஆனால், நிர்வாகம் அதனை சரியாக ஏற்றுக்கொள்ளாமல் வருகை பதிவேட்டில் எனது பழைய பெயரையும் மாற்றாமல் சக மாணவர்கள் முன்னிலையில் எனது பழைய பெயரை சொல்லி அழைக்கின்றனர்.

என் பழைய பெயர் ஒன்றும் வியாபாரம் அல்ல, என் வகுப்பு தோழர்களுக்கு அது பொருத்தமற்றதாக இருக்கிறது.

பழைய பெயருடன் கூட பல்கலைக்கழக மின்னஞ்சல் முகவரி ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைத்து மாணவர்களின் பெயர்களும் குழு மின்னஞ்சலில் இடம்பெறும், ஆனால் எங்களால் அதனை பயன்படுத்த முடியவில்லை, இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

founder of Transgender Network Switzerland Alecs Recher கூறியதாவது, பெர்ன் பல்கலைகழகத்தில் பெயர் மாற்றம் செய்வதென்றால் முறையான ஆவங்கள் சமர்ப்பிக்க வேண்டும், இதனால் தான் திருநங்கைகள் பெயர் மாற்றம் தொடர்பாக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்