சுவிஸில் டஜன் கணக்கில் உயிரிழந்த விலங்குகள்: சிக்கிய இளைஞன்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
196Shares
196Shares
lankasrimarket.com

மேற்கு சுவிற்சர்லாந்தில் டஜன் கணக்கான விலங்குகள் கோடைகாலத்தில் தீயினால் உயிரிழந்தன.

அதற்கு காரணமானவன் சிக்கியதற்கான முக்கிய தடயம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.

குறித்த நபர், இது போன்ற 12 தீவைப்பு தாக்குதல்களுடன் தொடர்புடையவன் என்பதும், அவன் 22 வயதே ஆன இளைஞன் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதம் 15ம் திகதி அன்று 24 குதிரைகள் தீயினால் இறந்ததற்கும் இவன் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

ஆனால், அவன் இந்த குற்றங்களை ஒப்புக் கொள்ளாமல், முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை பொலிசாரிடத்தில் கூறியதால் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.

இந்த மோசமான தீவைப்புகள் கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி Dompierreயில் உள்ள Fribourgயில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைப்பகுதிக் கீழ் தான் முதலில் தொடங்கியிருக்கிறது.

அதற்கு அடுத்த வாரமே ஆறு தீவைப்பு சம்பவங்கள் Vaud-Fribourg மண்டலங்களின் எல்லைப் பகுதியில் நடந்தன.

அதன் பின்னர், ஜூலை 29ம் திகதி Domdidier மற்றும் Payene பகுதிகளில் காளைகள், பசுக்கள் மற்றும் கன்றுகள் முதலிய 60 விலங்குகள் தானிய களஞ்சியங்களுடன் சேர்த்து தீ வைத்து கொளுத்தப்பட்டன.

சந்தேகத்திற்குரிய தீவைக்கும் நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி, Dompierreயில் உள்ள ஒரு கட்டடத்தின் வெடிவிபத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டான்.

அவன் சட்டை தீயினால் எரிந்து இருந்ததைக் கொண்டு பொலிசார் அவனை கைது செய்தனர். மேலும் அவனின் டி.என்.ஏ மாதிரிகளும், கட்டடத்தின் தரைப்பகுதியில் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறான தகவல்களை Vaud மற்றும் Fribourg மண்டலங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்