இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை கேட்ட இணையதள ஜோசியர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
337Shares
337Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் இணையதளம் வாயிலாக ஜோசியம் கூறும் நபர் ஒருவர் இளம்பெண்ணிடம், எதிர்காலத்தை கணிக்க அந்தரங்க புகைப்படம் கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் பகுதியை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணிடமே குறித்த நபர் எதிர்காலம் குறித்து கணித்துக் கூற அந்தரங்க புகைப்படம் கேட்டுள்ளார்.

சம்பவத்தன்று விளம்பரம் ஒன்றின் வாயிலாக ஸ்னாப் சேட் மூலம் தொடர்பு கொண்டுள்ளார் குறித்த இளம்பெண்.

இருவரும் அறிமுகம் செய்த பின்னர், மேலதிக தகவல் தெரிவிக்க புகைப்படம் ஒன்று தேவை என தெரிவித்துள்ளார் அந்த இணையதள ஜோசியர்.

மட்டுமின்றி, பொதுவாக தம்மிடம் எதிர்காலம் குறித்து அறியவரும் பெண்கள் தங்களது பிறப்பு உறுப்பின் புகைப்படங்களையே பகிர்ந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், குறித்த நபருடனான தொடர்பை துண்டித்ததுடன், உடனடியாக தமக்கு தெரிந்த உறவினர் ஒருவருடன் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து இளம்பெண்ணின் உறவினர் அடுத்த நாள் காலை St. Gallen பகுதி பொலிசாரிடம் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்