ஜெனிவா பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்ட ஆக்ஸ்போர்டு பேராசிரியர்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
160Shares
160Shares
lankasrimarket.com

பிரபல பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டின் முக்கிய பேராசிரியர் தாரிக் ராமதன். இவர் மீது எழுந்த அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களால் இவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸின் Tribune de Geneve என்ற பத்திரிக்கை, ராமதன் மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட்டதை தொடர்ந்து அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் இவர் ஜெனிவாவில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது, தங்களை பாலியல் ரீதியாக ராமதன் துன்புறுத்தியுள்ளதாக நான்கு பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

அவர்களுக்கு அப்போது வயது 15 முதல் 18 தான் இருக்கும். தனது ஆசிரியர் அதிகாரத்தை அவர் தவறாக பயன்படுத்தினார் என அவர்களில் ஒருவரான லீ தெரிவித்துள்ளார்.

ஆனால், ராமதன் மீது எந்த வித குற்றவியல் புகாரும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என ஜெனிவா நீதி அமைச்சகத்தை சேர்ந்த ஹென்றி டெல்லா காஸாவும், ராமதன் பணியாற்றும் போது எந்த பாலியல் குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படவில்லை என ஜெனிவா கல்வி அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

எனினும், கடந்த 2012ஆம் ஆண்டு ஹென்றி ஹயாரி என்பவர் ராமதன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.

ஆனால், ராமதன் இது குறித்து கூறுகையில், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை. இவ்வாறு என்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது சட்ட ரீதியான வழக்கு தொடருவேன் என தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுக்கும் ராமதன், இவை அனைத்தும் எதிரிகள் என் பெயரை கெடுக்கும் நோக்கில் பரபரப்பும் பொய் குற்றச்சாட்டுக்கள் என மறுத்து வருகிறார்.

இந்த விடயம் தற்போது மிகப்பெரிய விவாதமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்