ஏரியில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய பெண் கப்பல் துறை அதிகாரி

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
121Shares
121Shares
lankasrimarket.com

சுவிஸில் உள்ள ஜெனீவா ஏரியில் விழுந்த சிறுவனை கப்பல் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மாலை பிரான்ஸைச் சேர்ந்த Compagnie Générale de Navigation என்னும் கப்பல் படையினர் சுவிஸின் ஏரியைக் கடக்கும்போது சிறுவன் ஒருவன் ஏரியில் குதித்துள்ளான்.

இதனைக் கண்ட கப்பல் படையினர் விரைவாக தாங்களும் ஏரியில் குதித்தனர். ஏரியில் குதித்த படையில் Sandra Tiano என்ற ஒரு பெண் அதிகாரியும் இருந்தார். பின்னர், சிறுவனை காப்பாற்றிய அதிகாரிகள் கூறுகையில்,

குறித்த சிறுவன் வண்ண நிற ஆடை உடுத்தியிருந்ததால் எளிதாக அவனை காப்பாற்ற முடிந்தது. இல்லையெனில் இருள் சூழ்ந்த இந்த மாலை வேளையில் அவனை காப்பாற்றுவது மிக கடினமாக இருந்திருக்கும் என தெரிவித்தனர்.

துணிச்சலுடன் ஏரியில் குதித்து சிறுவனை காப்பாற்றிய Sandra Tianoக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும், சிறுவன் எதற்காக ஏரியில் குதித்தான் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்