பணத்திற்காக சகோதரியை அடித்த 66 வயது முதியவருக்கு சிறை விதித்த நீதிமன்றம்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
174Shares
174Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் 66 வயது நபர் ஒருவர் சொத்து பிரச்சனையில் தனது சகோதரியை மரக்கட்டையால் அடித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெர்ன் நகரில் வசித்து வந்த 66 வயது முதியவருக்கும் இவரது சகோதரிக்கும் இடையில் தொடர்ந்து காணிப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

தனது தங்கையிடம் இருந்து காணியை வாங்குவதற்கு இந்நபர் முயன்றுள்ளார், ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த இந்த முதியவர், சம்பவம் நடைபெற்ற அன்று சகோதரியின் வீட்டுக்கு சென்று மரக்கட்டையால் அவரது தலையில் அடித்துள்ளார்.

இதனால், அவரது தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில், இந்நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் இந்நபருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து Bernese நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்